மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுராந்தகம் அருகே நடைபெற்ற கோர கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் கடலூரை சேர்ந்த அப்துல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். விடுமுறை முடிந்து மீண்டும் வெளிநாடு செல்வதற்காக கடலூரில் இருந்து தனது குடும்பத்துடன் அவர் காரில் சென்னை வந்துள்ளார். இதனையடுத்து, குடும்பத்தினர் அப்துலை சென்னை விமான நிலையத்தில் வழி அனுப்பி விட்டு மீண்டும் காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அந்த கார் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தபோது முன்னாள் சென்ற லாரியின் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த அப்துலின் மனைவி ஜெய் பினிஷா, மகன்கள் மிஷால், பைசல் மற்றும் கார் ஓட்டுநர் சரவணன் சம்பவ ஆகியோர் இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்றொரு மகன் அக்தல் என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  

Night
Day