கல்பாக்கம் : மாடு குறுக்கே வந்ததால், கார் மரத்தின் மீது மோதி விபத்து - 5 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கல்பாக்கம் அருகே மாடு குறுக்கே வந்ததால், காரை திருப்பிய போது மரத்தின் மீது மோதிய விபத்தில் 5 பேர் பலி-


செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கூவத்தூரில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக மாடு ஒன்று திடீரென சாலையின் குறுக்கே வந்ததால், கார் ஓட்டுநர் வேகத்தை கட்டுப்படுத்த முயன்றுள்ளார். அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தில் மோதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வெல்டிங் இயந்திரங்கள் மூலம் காரின் இடிபாடுகளை அகற்றி, சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப்பின் உடல்களை மீட்டனர். மேலும், படுகாயமடைந்து உயிருக்கு போராடிய 2 பேரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து சதுரங்கப்பட்டினம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் அதிவேகத்தில் மது போதையில் காரை இயக்கியதாலும், மாடு குறுக்கே வந்ததாலும் இந்த கொடூர விபத்து நடைபெற்றது தெரியவந்துள்ளது. 

Night
Day