காவலாளி அஜித் மரண வழக்கு எதிரொலி

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்புவனம் இளைஞர் லாக்கப் மரணம் எதிரொலியால், தமிழகம் முழுவதும் உள்ள எஸ்.பி., டி.எஸ்.பி. தலைமையிலான அங்கீகரிக்கப்படாத சிறப்பு படைகளை கலைக்க தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் தனிப்படை போலீசார் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணைக்காக அழைத்து சென்ற கோவில் காவலாளி அஜித்குமாரை போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இளைஞர் போலீசார் தாக்கி உயிரிழந்தது உறுதியானது. இதன் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் காவல்துறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், டி.எஸ்.பி. போன்ற காவல் அதிகாரிகளுக்கு கீழ் இயங்கும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதேபோல், மாநகராட்சி பகுதிகளில் துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர்கள் கீழ் செயல்படும் அங்கீகரிக்கப்படாத தனிப் படைகளையும் கலைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Night
Day