பேருந்து - பைக் மோதி தீ விபத்து...

எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி பைபாஸ் சாலையில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி வீரபாண்டி பைபாஸ் சாலையில் தேனியில் இருந்து கம்பம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து மளமளவென தீப்பற்றி எரிந்தது. பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு உடனடியாக பேருந்தில் இருந்து இறங்கி ஓடியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகனமும் தீப்பற்றி எரிந்தது. எனினும் அதனை ஓட்டி வந்த நபர் தப்பி ஓடி தலைமறைவானார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Night
Day