எழுத்தின் அளவு: அ+ அ- அ
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரி எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்ததை அடுத்து அவர் பதவி இழந்தார்.
சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளில் அடிப்படைத் தேவைகள் முறையாகச் செய்து தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக-வை சேர்ந்த நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரியிடம் கூறியும், நடவடிக்கை எடுக்கவில்லையென, நகர்மன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்நிலையில், நகர்மன்ற தலைவி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டுமென திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 24 உறுப்பினர்கள், நகராட்சி ஆணையர் நாகராஜனிடம் மனு அளித்தனர்.
திமுக நகர்மன்ற தலைவிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக்கோரி, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களே அளித்திருந்த நிலையில், மொத்தம் உள்ள 30 உறுப்பினர்களில் 28 உறுப்பினர்கள் நகர்மன்ற தலைவி உமாமகேஸ்வரிக்கு எதிராக வாக்களித்ததால், அவருடைய பதவி பறிபோனது.