திருப்புவனம் ஏ.டி.எஸ்.பி.யிடம் நீதிபதி விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவில் காவலாளி அஜித் குமார் காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் உள்ள  பத்ரகாளியம்மன் கோவிலில் நகை காணாமல் போனது தொடர்பான விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர், போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம்  மற்றும் மரியா கிளாட் அகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இளைஞர் அஜித் குமார் மரணத்துக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தனர். 

மேலும், இந்த வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் கந்தர்லால் சுரேஷ் விசாரிக்க  நீதிபதிகள் உத்தரவிட்னர். இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுப்படி, இளைஞர் அஜித்குமார் வழக்கு தொடர்பான விசாரணை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார். திருப்புவனம் காவல் நிலையம், மடப்புரம் கோவில் உதவிஆணையர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நீதிபதி விசாரைணை நடத்தி வருகிறார். அப்போது நகை காணாமல் போனதான பெண் அளித்த புகாரின் பேரில் பதியப்பட்ட CSR மற்றும் FIR நகல் ஆகியவை நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் தனிப்படை காவலர்கள் அஜித்குமாரை அழைத்துச் சென்று விசாரித்த இடங்களிலும், அஜித்குமாரின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களிடமும் விசாரணை நடத்த நீதிபதி திட்டமிட்டுள்ளார்.

Night
Day