எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையில் மதபோதகர் மற்றும் வழக்கறிஞர் என்ற போர்வையில் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி சீரழித்த தந்தை மீது மகளே, டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்...
சென்னை அண்ணா நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தந்தையான மோசஸ் செல்லத்துரை மீது டிஜிபி அலுவலகத்தில் இன்று புகார் அளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது தந்தை மோசஸ் செல்லதுரை வழக்கறிஞர் மற்றும் போதகராக இருந்து வருவதால், தனது பெண் நண்பர் ஒருவர் வழக்கு தொடர்பாக தனது தந்தையிடம் வந்த போது அவரை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக கூறினார்.
இதே போல தனது தந்தை பல பெண்களை ஏமாற்றி வருவதாகவும், பல பெண்களை கர்ப்பமாக்கி காசு கொடுத்து கருக்கலைப்பு செய்து விடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தனது தந்தை மீது இருக்கு
ம் பயத்தின் காரணமாக பல பெண்கள் புகார் கொடுக்க முன்வரவில்லை அதனால் தனது தந்தை மீது நானே புகார் அளிக்க வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே மகளிர் ஆணையத்தில் இது தொடர்பாக புகார் கொடுத்ததாகவும், அப்போது விசாரணைக்கு ஆஜரான தனது தந்தை ஆயிரம் பெண்களை கூட திருமணம் செய்து கொள்வேன் என கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
அனைத்து விதமான ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாகவும், அனைத்து விதமான தவறையும் செய்துவிட்டு பணத்தினால் ஈடு கட்டலாம் என்ற தனது தந்தையின் நினைப்பை ஒடுக்க வேண்டும் என்பதற்காகவே புகார் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், கடவுள் கனவிலேயே வந்து நாம் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என பொய் கூறி பல பெண்களை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து ஏமாற்றி இருப்பதாகவும், பல பெண்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பாஸ்டர் என்ற பட்டத்தை படித்து வாங்காமல் முப்பதாயிரம் ரூபாய் கொடுத்து செர்டிபிகேட் வாங்கி வைத்திருப்பதாகவும், இவரை சட்டத்தின் முன் நிறுத்தாமல் விட்டால் தன்னைப்போல மேலும் சில இளம்பெண்கள் புகார் அளிக்க வருவார்கள் என தெரிவித்தார்.
ஷாப்பிங் துணிமணிகள் வாங்கி தருவது போல் நடித்து பழகுபவரிடம் இளம் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.