பெண்மையை இழிவுபடுத்தி பேசிய அமைச்சர் இணையத்தில் வைரலாகும் வீடியோ

எழுத்தின் அளவு: அ+ அ-

ராணிப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி தகாத வார்த்தையால் பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

விளம்பர அரசில் ஆபாச பேச்சுகளுக்கு பஞ்சமே இல்லை எனக்கூறும் அளவுக்கு திமுக அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி தனக்கு தானே ஆப்பு வைத்து கொள்வதில் போட்டிப் போட்டு வருகின்றனர். திமுக அமைச்சர்கள் கே.என்.நேரு, ராஜ கண்ணப்பன், முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் தரக்குறைவாக பேசி சர்ச்சையில் சிக்கியதை நாம் அறிவோம். அந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ளார் அமைச்சர் காந்தி... 

மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாளை முன்னிட்டு, ராணிப்பேட்டையில் திமுக மாணவரணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கைத்தறித்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான ஆர்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். மேடையில் பேசிய அமைச்சர் காந்தி, தகாத வார்த்தையை பயன்படுத்தியதுதான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

மேடையேறி மைக் பிடித்த அமைச்சர் காந்தி, ஆரம்பத்தில் தனது கட்சி வாழ்க்கையை வரலாற்று சாதனை போல விவரித்தார். நாட்டிலேயே நல்ல கட்சி நமது கட்சி என்பது போல சீன் காட்டிய பேசிய அமைச்சர் காந்தி, நம்ம வேலைய பாத்துட்ட நம்ம போய்டனும், மகளிருக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் நமது ஆட்சி என்றெல்லாம் சொல்லிவிட்டு.. பெண்மையை இழிவுபடுத்தும் வகையிலான ஆபாச வார்த்தையை பேசியதுதான் ஹைலைட்.. 

பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுகவினரே இதனை கேட்டு முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டது. அமைச்சரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

மக்களுக்கான பதவியில் வசிக்கும் ஒரு அமைச்சர் பொதுவேளியில் மேடைப்பேச்சில் இப்படி பேசலாமா? என கேள்வி எழுப்பும் பொதுமக்கள், இவர்கள் தான் பெண்மையை போற்ற போகிறார்களா? என வேதனையை வெளிப்படுத்தினர். 

Night
Day