அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை கொளத்தூரில் வடசென்னை மாவட்டக் கழகம் சார்பில் கழக நிர்வாகிகள் சுவரொட்டி ஒட்டி, புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். கழக நிர்வாகி மணிகண்டன் தலைமையில் வடசென்னை மாவட்டம் முழுவதும் கொளத்தூர் பகுதி நிர்வாகிகள், வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டியை ஒட்டியுள்ளனர்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் 71வது பிறந்தநாளையொட்டி, கோவை மாவட்டம், சூலூர் அடுத்த பட்டணம் பகுதியில் கழக நிர்வாகி ரகுநாதன் ஏற்பாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டது. பின்னர் பட்டணம் பகுதீயில் முடிதிருத்தும் தொழிலாளர் ஒருவருக்கு 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புதிய கண்ணாடி வழங்கப்பட்டது. இதேபோன்று பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் நல உதவிகளை வழங்கினர்.
புரட்சித்தாய் சின்னம்மாவின் 71வது பிறந்தநாளையொட்டி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தில்லையம்பூர் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு கழக நிர்வாகிகள் உணவு வழங்கினர். கழக நிர்வாகி மனோ கார்த்திகேஸ்வரன் ஏற்பாட்டின் பேரில் அறுசுவை உணவு முதியோர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் கோபிநாத், மணிகண்டன், சக்திவேல் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் 71வது பிறந்த நாளையொட்டி நெல்லை குறுக்குத் துறையில் உள்ள முதியவர் இல்லத்தில் கழக நிர்வாகிகள் இரவு உணவு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் கந்தன், சாமி, முருகப்பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில், உங்களின் லட்சியம் வெற்றி நிச்சயம் எனவும், கழகத்தின் ஆணிவேரே எனவும் வாழ்த்தி உள்ளனர்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட கழகம் சார்பில் கழக நிர்வாகிகள் தமிழரசன்,
கூத்தரசன், ராஜா செல்வராஜ், அம்மாகுளம் குமார், பூபதி, மோகன், மகேஷ், இப்ராஹிம் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். ஒன்றுபடுவோம் வென்றுகாட்டுவோம் என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில், சின்னம்மாவை வாழ்த்தி கழக நிர்வாகிகள் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். 'அஇஅதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா' என்றும், 'வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தாயே' என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டி, கழக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கழக நிர்வாகி கே.டி. ராமகிருஷ்ணன் ராமநாதபுரம் முழுவதும் புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார். ஆகஸ்ட் 18ல் பிறந்தநாள் கொண்டாடும் தங்களின் வழிகாட்டியே வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்று குறிப்பிட்டு நகர் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி உள்ளார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம், கமுதி மற்றும் கடலாடி, சாயல்குடி பகுதிகளில் கழக நிர்வாகிகள் சித்திரகுமார் மற்றும் கோமதி சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவுடன் 2026ம் ஆண்டு தமிழக முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.