புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்துப் பெற்ற சாதனை சிறுமி

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, நான்கரை வயது சாதனை சிறுமி மித்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சென்னை மேடவாக்கம் அருகே கோவிலம்பாக்கத்தை சேர்ந்த சந்தோஷ்ராஜா - லட்சுமி பிரியா தம்பதியினரின் நான்கரை வயது குழந்தையான மித்ரா, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற போட்டியில், 27 நிமிடங்களில் 54 சர்வதேச நிறுவனங்களின் லோகோவை சொல்லி சாதனை படைத்தார்.

இந்நிலையில், சாதனை சிறுமி மித்ரா மற்றும் அவரது குடும்பத்தினர், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சாதனை சிறுமிக்கு புரட்சித்தாய் சின்னம்மா, வாழ்த்து தெரிவித்ததுடன் சாக்லேட் வழங்கி மகிழ்ந்தார். இந்த சந்திப்பின்போது கழக நிர்வாகி திண்டிவனம் சேகர் உடனிருந்தார்.

Night
Day