புரட்சித்தாய் சின்னம்மாவுடன் நடிகர் சரத்குமார் குடும்பத்தினர் சந்திப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, நடிகர் சரத்குமார் குடும்பத்தினர் நேரில் சந்தித்து, தங்களது மகள் வரலட்சுமி சரத்குமாரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கினர்.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோர் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில், அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய்  சின்னம்மாவை நேரில் சந்தித்து, தங்களது மகள் வரலட்சுமி சரத்குமாரின் திருமண வரவேற்பு அழைப்பிதழை வழங்கி. புரட்சித்தாய் சின்னம்மா நேரில் வருகை தந்து தம்பதியினரை வாழ்த்த வேண்டுமென கேட்டுக்கொண்டனர். 

நடிகர் சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், தொழிலதிபர் நிக்கோலஸ் சச்தேவ் என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தம்பதியினருக்கு வரும் ஜூலை மாதம் 10 ஆம் தேதி தாய்லாந்து நாட்டில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக சென்னை எம் ஆர் சி நகர்  பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், ஜூலை 3 ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வரவேற்பு நிகழ்ச்சியில், அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தவேண்டும் என நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோர் கேட்டுக்‍கொண்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சி அழைப்பிதழை வழங்கினர்.

Night
Day