கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த சின்னம்மாவுக்கு கழக நிர்வாகிகள் நன்றி

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்‍குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆறுதல் கூறியதற்கு கழக நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

அஇஅதிமுக பிளவுபட்டு உள்ளதால், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும் பின்னடைவை சந்திக்க நேரிட்டது. இதனால், அதிர்ச்சிக்குள்ளான தொண்டர்கள், கழகத்தை தொடர் தோல்வியில் இருந்து காப்பாற்றவும், கழகத்தை வழிநடத்தவும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையேற்க வரவேண்டுமென அழைப்பு விடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குளச்சலில் வழக்கறிஞர் கிறைஸ்ட் மில்லர் தலைமையில் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிர் பலிகள் ஏற்பட்டதும் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்த புரட்சித்தாய் சின்னம்மாவிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் தவறுகளுக்கு பொறுப்பேற்று தி.மு.க அரசு ராஜினாமா செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் விஷச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Night
Day