புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சிலை சேதம் - ஒருவர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை அவனியாபுரத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் சிலையை சேதப்படுத்திய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

மதுரை அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள ஈஸ்வரன் கோவில் தெரு பகுதியில் நிறுவப்பட்டிருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சிலையை கடந்த 5ம் தேதி நள்ளிரவில் மர்மநபர் ஒருவர் சேதப்படுத்தினார்.

இச்சம்பவத்திற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியிருந்தார்.

இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் அவனியாபுரம் அருணகிரிநாதர் கோவில் தெருவை சேர்ந்த மணிமாறன் என்ற இளைஞரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது மதுபோதையில் எம்ஜிஆர் சிலையை அவர் சேதப்படுத்தியது தெரியவந்தது. அதனை தொடர்ந்து மணிமாறன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Night
Day