சட்டப்பேரவை வளாகத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் தர்ணா

எழுத்தின் அளவு: அ+ அ-

 பாமக சட்டமன்றக் குழு தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.மணியை நீக்கக் கோரி அன்புமணி ஆதரவு எம் எல் ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்.

பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும், அக்கட்சி தலைவருமான அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து  பாமக எம்.எல்.ஏக்கள் ஐந்து பேரில் ஜி.கே.மணியும் சேலம் மேற்கு தொகுதி எம் எல் ஏ அருள் ஆகியோர்  ராமதாஸ் ஆதரவாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார், தருமபுரி எம் எல் ஏ வெங்கடேஸ்வரன், மேட்டூர் எம் எல் ஏ சதாசிவம் ஆகியோர் அன்புமணியின் ஆதரவாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாமகவின் சட்டமன்றக் குழு தலைவராக உள்ள ஜிகே மணியை நீக்கிய அன்புமணி, தருமபுரி வெங்கடேசனையும், பாமகவின் சட்டமன்ற கொறடாவாக மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமாரையும் நியமித்தார். இதனைத் தொடர்ந்து ஜி.கே.மணியை நீக்க வேண்டும் என்று சட்டப்பேரவை சபாநாயகரின் அன்புமணி ஆதரவு எம் எல் எக்கள் கடிதம் கொடுத்தனர். இந்த கடிதத்தின் மீது சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காததால் இன்று சட்டசபை கூடியுள்ள நிலையில் அன்புமணி ஆதரவு எம் எல் ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனிடையே, பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு பிரிவாக செயல்படுவது வருத்தமளிப்பதாக பாமக சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவர் ஜி.கே மணி தெரிவித்துள்ளார். சட்டபேரவை வளாகத்தில் பேட்டி அளித்த அவர், இதனால் 45 ஆண்டுகளாக ஒற்றுமையாக இருந்து பாமகவை வழிநடத்தி வரும் ராமதாஸ் வருத்ததில் உள்ளதாகவும் தெரிவித்தார்.  

Night
Day