சென்னை கிரீன்வேஸ் சாலையில் நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் நடந்த சோதனை நிறைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீடு மற்றும் சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் 2-வது நாளாக அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

பூடானிலிருந்து சொகுசு கார்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாக துல்கர் சல்மான் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனை நடைபெற்றது. இதனிடையே துல்கர் சல்மான் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான லோக்கா படம் இந்தியா முழுவதும் சுமார் 300 கோடிக்கு மேல் வசூலானது. இந்தப் படத்தின் மூலம் வசூலான பணத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் 2 வது நாளாக சோதனையானது நடைபெற்றது. சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பசுமைவழிச் சாலையில் உள்ள சினிமா தயாரிப்பு நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது. சோதனையில், 200க்கும் மேற்பட்ட கார்கள் பூடானில் இருந்து முறைகேடாக வாங்கிய தொடர்பாக 39 கார்கள் பறிமுதல் செய்த நிலையில் நடிகர்களுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

Night
Day