நெல்லை: மின்இணைப்பு மற்றும் பட்டா வழங்கவில்லை என பொதுமக்கள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் திம்மராஜபுரத்தில் மின்இணைப்பு மற்றும் பட்டா வழங்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். திம்மராஜபுரத்தில் சுமார் 3 ஆயிரதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில் ஆயிரத்து 200 குடியிருப்புகள், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள், பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். மேலும் மின் இணைப்பையும் துண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் முப்புடாதி அம்மன் கோவில் திடலில் பந்தல் அமைத்து கருப்பு கொடி கட்டி தர்ணாவில் ஈடுபட்டனர்.

varient
Night
Day