எழுத்தின் அளவு: அ+ அ- அ
தைலாபுரம்தான் இனி பாமகவின் தலைமையகம் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக செயல் தலைவராக அறிவிக்கப்பட்ட அன்புமணி மேற்கொள்ளவுள்ள நடை பயணத்திற்கு தடை விதிக்கக் கோரி ராமதாஸ் தரப்பில் டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டது. இதனிடையே விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரையோ. கொடியையோ அன்புமணி பயன்படுத்தக் கூடாது என்று எச்சரித்தார். கட்சியும் நான் தான், தலைவரும் நான் தான் எனக் கூறிய ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியில் அன்புமணி செயல் தலைவராக தொடர்வார் என்று அறிவித்தார். தொடர்ந்து பேசிய ராமதாஸ், சென்னையில் பாமகவிற்கு தலைமையகம் இல்லை என்றும், தைலாபுரம்தான் இனி பாமகவின் தலைமையகம் என்றும் அறிவித்தார். பனையூரில் கட்சி தலைமையகம் இருப்பதாக சொல்வது சட்டவிரோதம் என்று தெரிவித்த ராமதாஸ், அன்புமணி பெயருக்கு பின்னால் தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என ஏற்கெனவே அறிவித்துள்ளதாகவும் கூறினார்.