அல் கொய்தா தீவிரவாதிகள் 4 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குஜராத் மாநிலத்தில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 4 பேரை, பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

அல்கொய்தா அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக டெல்லியை சேர்ந்த முகமது ஃபைக், குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த முகமது பர்தீன், மொடாசாவை சேர்ந்த செபுல்லா குரேஷி மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த ஜீஷன் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பயங்கரவாத செயல்களுக்கு ஆட்கள் சேர்த்து வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக டெல்லியை சேர்ந்த முகமது ஃபைக், பாகிஸ்தானை சேர்ந்த நபருடன் இன்ஸ்டா வலைதளத்தில் தொடர்பில் இருந்ததாகவும், இந்தியாவில் ஜிஹாதி நடவடிக்கைகளைப் பரப்புவதற்கான வழிகள் குறித்து விவாதித்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் தடயங்களை அழிப்பதற்காக ஆட்டோ டெலீட் செயலியை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

Night
Day