தமிழகம்
தமிழகத்தில் ஆக.5ஆம் தேதி ரெட் அலர்ட்
தமிழகத்தில் வரும் 5-ம் தேதி ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக...
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் தெரு நாய்கள் கடித்து 20 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழவேற்காடு பகுதியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்லும் வழியில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால், அங்கு ஏராளமான நாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு வெறி பிடித்து அலைகின்றன. இந்த வெறிநாய்கள் அப்பகுதி வழியாக செல்லும் பொது மக்களை அவ்வப்போது கடிப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் வெறிநாய்கள் கடித்து காயமடைந்த 20 பேர், பழவேற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே மருத்துவமனையில் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வெறி நாய் கடிக்கு ஆளானவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் வரும் 5-ம் தேதி ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே டாக்சி ஓட்டுநர் அலட்சியத்தால் நேர்ந்த விபத...