திருவள்ளூர்: குழந்தை கடத்த வந்ததாக நினைத்து வடமாநில இளைஞரை தாக்‍கிய மக்‍கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் வீடியோ காலில் பேசியபடி சென்ற வடமாநில நபரை, குழந்தை கடத்த வந்ததாக நினைத்து பொதுமக்‍கள் தாக்‍கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டியில் மது போதையில் இருந்த வட மாநில இளைஞர் ஒருவர், வீடியோ காலில் பேசியபடியும், செல்ஃபி எடுத்தபடியும் சாலையில் நடந்து சென்றுள்ளார். அந்த இளைஞர் குழந்தை கடத்த வந்ததாக நினைத்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர், அவரை தாக்‍கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை மீட்டு விசாரணை நடத்தியதில், அவர் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருவதும், போதையில் உறவினருடன் வீடியோ காலில் பேசியபடி சென்றதும் தெரியவந்தது.

varient
Night
Day