தமிழகம்
ஆமை வேகத்தில் மேம்பாலப் பணி - வாகன நெரிசல்
ஆமை வேகத்தில் மேம்பாலப் பணி - வாகன நெரிசல்பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெ...
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கானாவிளக்கு பகுதியில் அமைந்துள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், மருத்துவமனை முன்பு உள்ள குமுளி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடை, கடந்த மாதம் தமிழக ஆளுநர் தேனி மாவட்டத்திற்கு வருகை தந்தபோது அகற்றப்பட்டது. இதனால் வாகனங்கள் வேகமாக வருவதால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சாலையை கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பெரும் ஆபத்து ஏற்படும் முன்னர், அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆமை வேகத்தில் மேம்பாலப் பணி - வாகன நெரிசல்பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெ...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 080 ...