திருவள்ளூரில் தேர்தல் விதிமீறல் அமைச்சரின் நிகழ்ச்சி நிறுத்தம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி திருவள்ளுரில் நடைபெற்ற அமைச்சர் காந்தியின் நிகழ்ச்சியை அதிகாரிகள் பாதியிலேயே நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் ஆயில் மில் அருகே உலக மகளிர் தினத்தையொட்டி அமைச்சர் காந்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த உதவி தேர்தல் அதிகாரி மற்றும் பறக்கும் படையினர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தேர்தல் விதி அமலில் இருப்பதால் நிகழ்ச்சியை நிறுத்தும்படி கூறினர். அதன் பேரில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.  

Night
Day