டெல்லி : முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு 9வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

டெல்லியில் மதுபான கொள்கை வழக்கில் 2 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியாவும், ஆம் ஆத்மி எம்பியும் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால், வரும் 21ம் தேதி ஆஜராகும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Night
Day