பாஜகவில் இணைந்த பிரபல பின்னணி பாடகி அனுராதா பட்வால்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரபல பின்னணிப் பாடகியான அனுராதா பட்வால், பாஜகவில் இணைந்துள்ளார். இந்தி திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகியாக இருப்பவர் அனுராதா பட்வால். ஆயிரக்கணக்கான இந்திப் பாடல்களை பாடியுள்ளார். இது மட்டுமல்லாமல் மராத்தி, ஒரியா, பெங்காலி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் இவர் பாடியுள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாடகி அனுராதா பட்வால் நேற்று பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அர்ஜுன் சிங் முன்னிலையில் அனுராதா பட்வால் பாஜகவில் இணைந்தார்.

varient
Night
Day