பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த மாதம் 17 ஆம் தேதி நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக செயல் தலைவர் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன் வைத்த பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கட்சி நிறுவனர் ராமதாசுக்கு பரிந்துரை செய்தது. இதனைத்தொடர்ந்து 16 குற்றச்சாட்டுகளுக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அன்புமணி விளக்கம் அளிக்கவில்லை. இச்சூழலில் நேற்று தைலாபுரத்தில் கூடிய பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு, அன்புமணி மீது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து ராமதாசிடம் அளித்தது.  

அதனைத் தொடர்ந்து இன்று ராமதாஸ் தலைமையில் பாமக மற்றும் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், மாவட்டத் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து கட்சிக்கும், நிறுவனர் ராமதாசுக்கும் எதிராக செயல்பட்டு வரும் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day