திருப்பூர்- நூல் விலை கிலோவுக்கு ரூ.3 உயர்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

பஞ்சு தட்டுப்பாடு எதிரொலி காரணமாக நூல் விலை கிலோவுக்கு 3 ரூபாய் உயர்த்தி நூற்பாலைகள் அறிவித்துள்ளனர். 

பின்னலாடை தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக பருத்தி நூல் உள்ளது. ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று நூற்பாலை உரிமையாளர்கள் நூல் விலையை அறிவிப்பது வழக்கம். இந்த மாதத்திற்கான நூல்விலையை 3 ரூபாய் உயர்ந்தி நூற்பாலைகள் அறிவித்துள்ளன. இந்த நூல் விலை பனியன் உற்பத்தியாளர்களை கலக்கம் அடைய செய்துள்ளது. நூல் விலை உயர்வு காரணமாக, சர்வதேச சந்தையில் போட்டியிட்டு ஆர்டர்களை எடுக்க முடியாத நிலையில் திருப்பூர் உற்பத்தியாளர்கள் உள்ளனர். நூல் விலை உயர்வு காரணமாக ஆயத்த ஆடை ஏற்றுமதி பாதிக்கும் அபாயம் உள்ளதாக ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் அச்சமடைந்துள்ளனர். 

Night
Day