எழுத்தின் அளவு: அ+ அ- அ
மதுரையில் பிரபல ரவுடி வெள்ளைக்காளி தரப்பை சேர்ந்த ரவுடி சுபாஸ் சந்திரபோஸ், காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் ஆதரவாளரான சுபாஷ் சந்திரபோஸ் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கொலை சம்பவத்திற்காக திட்டமிட்டு மதுரை சிலைமான் பகுதி அருகே காட்டுப்பகுதியில் சுபாஷ் சந்திரபோஸ் பதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த காவல்துறையினர் சுபாஷ் சந்திரபோசை கைது செய்ய முயன்ற போது காவல்துறையினரை தாக்கியுள்ளார். இதையடுத்து தற்காப்புக்காக காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்தார்.
சமீபத்தில் நிகழ்ந்த கிளாமர் காளி கொலை வழக்கு தொடர்பாக என்கவுண்டர் செய்யப்பட்டதாக முதலில் தகவல் வெளியான நிலையில் இத்தகவலை காவல்துறை மறுத்துள்ளது. வேறு ஒரு கொலையை நிகழ்த்த திட்டமிட்ட சுபாஷ் சந்திரபோசை கைது செய்யும் முயற்சியில் என்கவுண்டர் செய்யப்பட்டதாகவும் காவல்துறை விளக்கமளித்துள்ளது.