குரூப் 1, குரூப் 1 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை வெளியீடு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு அரசு பணிகளுக்கு போட்டி தேர்வுகள் மூலம் ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2025ஆம் ஆண்டுக்கான குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ  பணிகளுக்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் 1 தேர்வுக்கு மொத்தம்  70 காலி பணியிடங்களும், குரூப் 1 ஏ தேர்வுக்கு 2 காலி பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 8 முக்கிய பதவிகளுக்கான முதல் நிலை தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ தேர்வுக்கான வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 34 ஆகவும், பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி, எஸ்டி ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 39 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Night
Day