திருப்பரங்குன்றம் மலை மீது விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல்கள் வருகிறது - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

'தேசிய கல்வி கொள்கை ஒரு நாளில் கொண்டு வரப்பட்டது அல்ல' என்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் எல்.முருகன் தரிசனம் செய்தார். பின்னர் பேட்டி அளித்த அவர், திருப்பரங்குன்றம் மலை மீது விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல்கள் வருகிறது. இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தமிழக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், தேசிய கல்வி கொள்கை என்பது ஒரேநாளில் கொண்டு வரப்பட்டது அல்ல என்றும்,  இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப நமது இளைஞர்களை தயார் செய்வதற்கான பொறுப்பு நமக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். 

Night
Day