கடைக்கு சென்று திரும்பிய சிறுவனை துரத்திய தெரு நாய்கள்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் கடிக்க துரத்திய தெருநாய்களிடம் இருந்து சிறுவன் ஒருவன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 


அங்குள்ள தென்னல பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான கிரண் என்பவரின் 7 வயது மகன் தக்ஷிந், அருகிலுள்ள கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது சிறுவனை 5க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடிக்க துரத்தின. தெருநாய்களுக்கு பயந்து சிறுவன் ஓடிய நிலையில், இதைப் பார்த்த பெற்றோர் விரைந்து வந்து நாய்களை துரத்தியடித்தனர். 7 வயது சிறுவனை நாய்கள் துரத்தும் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Night
Day