திருப்பத்தூர்: மர்ம காய்ச்சலுக்கு 10 வயது சிறுமி பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மர்ம காய்ச்சலுக்கு 10 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கவுகாப்பட்டு பகுதியை சேர்ந்த அரவிந்தன்- திவ்யா தம்பதியரின் மகள் பிந்து ஸ்ரீ சிக்கனாங்குப்பம் அரசு பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். சிறுமிக்கு கடந்த 3 நாட்களாக காய்ச்சல் இருந்ததால், நேற்று வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை பிந்து ஸ்ரீ உயிரிழந்தார். 

Night
Day