திருச்சி : திமுகவினர் தேர்தல் விதிமீறல் - 20 கார்களுடன் வந்த அமைச்சர் கே.என்.நேரு

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி நகரில் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தின்போது அமைச்சர் நேரு, வேட்பாளருடன் 20க்கும் மேற்பட்ட கார்கள் புடை சூழ சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு ஆதரவு திரட்டி அமைச்சர் கே.என் நேரு தனது மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பீமநகர், கருமண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, தேர்தல் விதிமுறைகளை மீறி 20க்கும் மேற்பட்ட கார்களில் சென்றதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்தனர். பிரச்சாரம் தொடங்கியது முதல் வழியெங்கிலும் கூட்டணி கட்சியினர் கூட யாரும் வராததால் அமைச்சர் கே.என்.நேரு ஏமாற்றத்துடன் காரில் வேகமாக சென்றார்.

Night
Day