தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ, ஆடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் எனக்கூறி மிரட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன சைவ மடத்தின் 27வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பராமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இவரது உதவியாளர் விருத்தகிரியை தொடர்பு கொண்ட சிலர், தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ, ஆடியோவை வெளியிடுவேன் என்றும், வெளியிடக்கூடாது என்றால் 100 கோடி ரூபாய் பணம் தர வேண்டும் என்றும் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விருத்தகிரி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், 4 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார், பாஜக மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...