தமிழகத்தில் கடினமாக உழைக்கும் பீகார் மாநிலத்தவர்களை மோசமாக நடத்தும் திமுக - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டில் கடினமாக உழைக்கும் பீகார் மாநிலத்தவர்களை திமுகவினர் மோசமாக நடத்தியதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சாப்ராவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக இருந்த போது பீகார் மக்களை பஞ்சாப்புக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறியதாக தெரிவித்தார். அவரது இந்த பேச்சுக்கு மேடையில் இருந்த காங்கிரஸ் குடும்பத்தின் மகளான, தற்போது எம்.பி.யாக இருப்பவர் கைதட்டி மகிழ்ந்ததாகவும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். 

கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களும் அவர்களின் கூட்டணிக் கட்சியான திமுகவினரும் அந்தந்த மாநிலங்களில் பீகார் மக்களின் உழைப்பை சுரண்டி மோசமாக நடத்தியதாகவும் குற்றம்சாட்டினார். அந்த தலைவர்களை எல்லாம் தற்போது இண்டி கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அழைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Night
Day