கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழாவில் பங்கேற்ற பின் மதுரை வந்த அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, இரவு சென்னை புறப்பட்டார். முன்னதாக ஹோட்டலில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை மதுரை கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மீதான விசுவாசத்தால் மதுரை கீழவாசல் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரவி, தனது ஆட்டோவில் புரட்சித்தாய் சின்னம்மாவின் புகைப்படங்களை ஒட்டி மக்களுக்கு சேவை செய்து வருகிறார். இந்நிலையில், ஆட்டோவுடன் வந்து புரட்சித்தாய் சின்னம்மாவை மரியாதை நிமித்தமாக சந்தித்த ஓட்டுநர் ரவி, புரட்சித்தாய் சின்னம்மாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Night
Day