உச்சநீதிமன்றம், பசுமை தீர்ப்பாய உத்தரவுகள் தெரியாமல் கட்டுமானத்திற்கு சிஎம்டிஏ அனுமதி வழங்கியது எப்படி

எழுத்தின் அளவு: அ+ அ-

பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சதுப்பு நிலங்களில் இனப்பெருக்கத்திற்காக வரும் பறவைகள் உயிரிழக்கும் நிலை இருப்பதாக அறப்போர் இயக்கம் வேதனை தெரிவித்துள்ளது. ராம்சார் நிலங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் எதன் அடிப்படையில் கட்டுமானம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது என்றும் அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. சிஎம்டிஏ, சியா, எஸ்சிஎஸ்சி, வனத்துறை போன்றவை தெளிவாக திட்டமிட்டு அனுமதி வழங்கியுள்ள விவகாரத்தில் பல நூறு கோடி ரூபாய் கைமாறியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் ராம்சார் நிலத்தில் கட்டுமானம் நடைபெறுவது தெரிந்தும் தமிழக அரசு அதை ஏன் தடைசெய்யவில்லை என்றும் அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.   

Night
Day