'பிரதமர் குறிப்பிட்டது திமுகவினரை... திரித்துக் கூறுகிறார் முதல்வர் ஸ்டாலின்...' - அண்ணாமலை குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகார் பிரசாரத்தில் பிரதமர் மோடி திமுகவினர் குறித்து பேசியதை தமிழக மக்கள் குறித்து பேசியதாக  முதலமைச்சர் ஸ்டாலின் தனது வழக்கமான பாணியில் மடைமாற்றம் செய்துள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். 

தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, உழைக்கும் பீகார் மக்கள் குறித்து திமுக அமைச்சர்கள் முதல் கடைக்கோடி திமுக நிர்வாகிகள் வரை ஏளமான பேசியது அனைவரும் அறிந்தது என தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி திமுகவினரைக் குறிப்பிட்டதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது ஸ்டாலின் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கே அவமானம் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். தாத்தா காலத்தில் தொடங்கிய இந்த அற்ப அரசியல், பேரன் காலத்திலும் தொடர்வதை, முதலமைச்சர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். 

varient
Night
Day