மக்களை புறக்கணித்த அமைச்சர் அன்பில் மகேஷ்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி திருவெறும்பூர் அருகே பட்டா வழங்கக்கோரி மனு அளிக்க காத்திருந்தவர்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புறக்கணித்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், தாசில்தார் வாகனத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம், கீழ முல்லக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். ஆனால் சாலை வசதி, பட்டா, குடிநீர் உள்ளிட்ட எந்த வித வசதிகளும் செய்து தராததை கண்டித்து அப்பகுதி மக்கள் முகாமை புறக்கணித்தனர். பின்னர், முகாமை துவக்கி வைத்தப்பின் திரும்பிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கலாம் என மக்கள் காத்திருந்தனர். ஆனால் அவர்களை அமைச்சர் கண்டுகொள்ளாமல் அலட்சியத்துடன் காரில் வேகமாக சென்றுவிட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டுகொள்ளாமல் போனதால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் திருவெறும்பூர் வட்டாட்சியர் தனலட்சுமி வந்த வாகனத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களின் கோரிக்கைகளுக்கு செவி சாயக்காத விளம்பர திமுக அரசுக்கு வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம் என்றும் கிராம மக்கள் சூளுரைத்தனர்.

varient
Night
Day