7 மாத கர்ப்பிணியை தெரு நாய் கடித்து குதறியதால் பொதுமக்கள் அச்சம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மணப்பாறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணை தெருநாய் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு லெட்சுமிபுரத்தைச் சேர்ந்த சங்கவி என்ற 7 மாத கர்ப்பிணி பெண் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த தெருநாய் ஒன்று அவரது கால் மற்றும் கையை கடித்து குதறியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சங்கவியை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மணப்பாறை பகுதியில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அடிக்கடி நாய்க்கடிக்கு ஆளாவதாகவும், சாலையின் குறுக்கே நாய்கள் செல்லும்போது விபத்துகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day