தமிழகம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - அதிகாரிகள் ஆஜர்
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் இறைச்சிக்கடை உரிமையாளர் 18 நிமிடத்தில் 558 முறை இடைவிடாது தோப்புக்கரணம் போட்டு இவரது முந்தைய உலக சாதனையை இவரே முறியடித்தார். பேராவூரணி புதுரோடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார். தவறு செய்யும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கொடுக்கும் தண்டனை தோப்புக்கரணம் போடச் சொல்வது. இது நாளடைவில் கைவிடப்பட்டது. இதனிடையே மணிகண்டன் இந்த தோப்புக்கரணத்தின் மூலம் உடலுக்கு ஏற்படும் நற்பலன்களை உணர்ந்து ஒரு மாதத்திற்கு முன்பு 20 நிமிடத்தில் 558 முறை தோப்புக்கரணம் போட்டு உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து குறைந்த நிமிடத்தில் சாதனை படைக்க முயற்சித்த இவர், இன்டர்நேஷனல் பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பின் பிரதிநிதி முன்னிலையில் 18 நிமிடத்தில் 558 முறை தோப்புக்கரணம் போட்டு இவரது சாதனையை இவரே முறியடித்தார்.
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...