தமிழகம்
பகுதி நேர ஆசிரியர்கள் 2வது நாளாக போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
தஞ்சையில் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில் அரசு பேருந்து நடத்துனரை தனியார் பேருந்து ஒட்டுனர் மற்றும் நடத்துனர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பட்டுக்கோட்டையில் இருந்து அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் பயணிகளை ஏற்றி கொண்டு தஞ்சைக்கு புறப்பட்டது. அப்போது வரும் வழியில் பயணிகளை ஏற்றுவதில் இரு பேருந்து ஓட்டுனர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனிடையே தொம்பன் குடிசை பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தை பின்னால் வந்த தனியார் பேருந்து ஓட்டுனர் வழி மறித்து பேருந்து ஓட்டுனரிடம் தகராறு செய்துள்ளார். இதனை தடுத்து சமாதனப்படுத்திய அரசு பேருந்து நடத்துனரை தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் விரட்டி சென்று தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...