தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினரை 'கண்டா வரச்சொல்லுங்க' என ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குள் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி வருகிறது. திமுகவைச் சேர்ந்த எஸ் எஸ் பழனிமாணிக்கம் என்பவர் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் எம்.பி.ஆக பொறுப்பேற்றது முதல் இந்நாள் வரை தொகுதி பக்கமே எட்டிப்பார்க்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் மன்னார்குடி பகுதியில் 'தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினரை கண்டா வரச் சொல்லுங்க' என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. தங்கள் தொகுதி எம்.பி. யார்? என்பதை பொதுமக்களே மறந்துவிட்ட நிலையில், தற்போது ஒட்டுப்பட்டுள்ள சுவரொட்டி, அப்பகுதி மக்களிடையே நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...