தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 560 ரூபாய் அதிகரித்து, சவரன் 52 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மாதம் 28ம் தேதி 50ஆயிரம் ரூபாய் என புதிய உச்சம் தொட்ட ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று சவரனுக்கு 200 ரூபாய் குறைந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து 6 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 84 ரூபாய்க்கும், கிலோவுக்கு 2 ஆயிரம் அதிகரித்து 84 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Night
Day