கமல்ஹாசனின் பிரச்சாரத்துக்‍கு டோக்‍கன் கொடுத்து மக்‍களை அழைத்து வந்த திமுகவினர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ராஜகோபுரம் முன் நடைபெற்ற கமல்ஹாசன் பிரச்சாரத்திற்காக டோக்கன் கொடுத்து மக்களை திமுகவினர் அழைத்து வந்தனர்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில், மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவை ஆதரித்து திமுக நட்சத்திர பேச்சாளர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
கூட்டத்தை காட்ட வேண்டும் என்பதற்காக மக்களுக்கு டோக்கன் கொடுத்து திமுகவினர் ஆட்கள் சேர்த்துக்கொண்டு வந்திருந்தனர்.  தீப்பெட்டி சின்னம் பொறித்த டோக்கனை அவர்களுக்‍கு ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன் வழங்கினர். இந்தச் செயல் சாமானிய மக்களையும் அரசியல் கட்சி சார்பற்ற நடுநிலையாளர்களையும் திமுக கூட்டணி மீதும் மேலும் அதிருப்தியடைய செய்தது.

Night
Day