கனமழையால் ஓட்டு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பெய்த கனமழையால் ஓட்டு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது. கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி சோனைமுத்து என்பவர் தனது மனைவி மற்றும் 9 வயது பேத்தியுடன் ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். இப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அவரது வீட்டின் சமையலறையில் இருந்த மேற்கூரை இடிந்து விழுந்தது. சோனைமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர் வேறு அறையில் உறங்கிக் கொண்டிருந்ததால் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Night
Day