டெல்லியில் இருந்து விமானம் மூலம் வேலூர் வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தில் உள்ள தங்ககோயிலில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். 

ஆன்மிக பயணமாக டெல்லியில் இருந்து விமானம் மூலம் வேலூர் வந்தடைந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை,  ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கிருந்து சாலை மார்க்கமாக ஸ்ரீபுரத்தில் உள்ள தங்ககோயிலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்றடைந்தார். அங்கு கோயில் நிர்வாகம் சார்பில் பொன்னாடை மற்றும் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து தங்ககோயிலில் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து ஸ்ரீ நாராயணி அம்மன் கோவில், விநாயகர் கோவில், சொர்ணலட்சுமி மற்றும் பெருமாள் கோயில்களில் குடியரசுத் தலைவர் சுவாமி தரிசனம் செய்தார்.

ஸ்ரீபுரம் தங்கக் கோவில் வளாகத்தில் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைத்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த நாராயண சிலை மீது மலர் தூவி குடியரசுத் தலைவர் வழிபட்டார்.   

இதையடுத்து தங்கக்கோவிலுக்கு வந்ததை நினைவு கூறும் விதமாக வில்வம் மரக்கன்றை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நட்டு வைத்தார். 


Night
Day