சாலையில் சென்ற அரசுப்பேருந்தின் டயர் வெடித்து சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சென்ற அரசுப் பேருந்தின் டயர் வெடித்து சக்கரம் கழன்று ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

காரைக்குடியில் இருந்து கொடைக்கானலுக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தபோது, மேட்டுக்கடை பகுதியில் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து சக்கரம் தனியாக கழன்று ஓடியது. இதனைக் கண்ட பயணிகள் அலறியடித்து கூச்சலிட்டனர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர், பேருந்தை சாமர்த்தியமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஓட்டுநரின் சாதுர்யத்தால் பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். அரசுப் பேருந்துகள் பழுதாவது தொடர்கதையாகி வருவதால் போக்குவரத்துத்துறை நிர்வாகம் பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day