ஜெயா தொலைக்காட்சி செய்தியாளர் மறைவு - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஜெயா தொலைக்‍காட்சியின் செய்தியாளர் வி.வி. இளங்கோவன் மறைவுக்‍கு, அஇ​அதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் ​சின்னம்மா, எக்‍ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜெயா தொலைக்காட்சியில் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் செய்தியாளராக தொடர்ந்து பணியாற்றி வந்த வி.வி.இளங்கோவன், இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.

புரட்சித்தலைவி அம்மாவின் நன்மதிப்பை பெற்றவர் இளங்கோவன் - திமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான செய்திகளை துணிச்சலோடு சேகரித்தவர் - ஆளும்வர்க்கத்தினரின் அடக்குமுறைகளுக்கு அடிபணியாமல் நேர்மையாக பணியாற்றியவர் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

இளங்கோவனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய சகபணியாளர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

Night
Day