சென்னை பம்மல் - சிலிண்டர் ஏற்றி வந்த சரக்கு லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பம்மல் பிரதான சாலையில் சிலிண்டர் ஏற்றி வந்த  சரக்கு லாரி பள்ளத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பம்மல் பிரதான சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக கடந்த 4 மாதத்திற்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டு பள்ளத்தை மூடியுள்ளனர். இருப்பினும் அந்த பள்ளம் சரிவர மூடப்படாததால் வாகனங்கள் அடிக்கடி சிக்கி கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இதனிடையே  மாதவரத்தில் இருந்து சிலிண்டர் ஏற்றிக் கொண்டு வந்த சரக்கு வாகனம் பள்ளத்தில் சிக்கி சாய்ந்தவாறு உள்ளது.  இதனால் பல்லாவரத்தில் இருந்து பம்மல், அனகாபுத்தூர் நோக்கி வரும் வாகனங்கள் சிரமத்தோடு கடந்து சென்றன. லாரியை மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சிலிண்டர் வாகனம் என்பதால் அசம்பாவிதம் ஏற்படும் முன் மீட்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். 

varient
Night
Day