சென்னை தாம்பரம் : விபத்தால் ஸ்தம்பித்த ஜி.எஸ்.டி. சாலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையை அடுத்த தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் அடுத்தடுத்து அரசு பேருந்து உள்ளிட்ட 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜிஎஸ்டி சாலையில் டெம்போ வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்து வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதனால் பின்னால் வந்த இரண்டு பேருந்துகள் நிலைத்தடுமாறி டெம்போ வாகனம் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்த நிலையில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இந்த விபத்தால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். 

varient
Night
Day